Wednesday, December 20, 2023

பீர்முகம்மத் சேர்

 

பீர்முகம்மத் சேர்

 

ஒரு சிலரை மட்டுமே தூக்கிப் பிடிக்கும் பல்கலை மலட்டு வாதம் கைலாசத்தம்பிகளின் காலத்தில் தொடக்கி வைக்கப்பட்டது.
இதனை அப்போது எம்.ஏ.நுஃமான் போன்றவர்கள் எதிர்த்தார்கள். நுஃமான் போன்றவர்கள் பிற்காலத்தில் அரியாசனத்திற்கு வந்தபோது அவர்களும் ஒரு சிலரை மட்டும் தூக்கிப்பிடித்து குஞ்சம் கட்டி மகிழ்ந்தார்கள்
தற்போதுள்ள கிழக்கிலங்கை பேராசிரியர்கள் சிலரும்கூட அதே பாணியில் 'சாப்பாட்டுக்குப் பிறகு மூன்று தியாலம்' ஒரு சிலருக்கு எவ்வாறு தீந்தை பூசலாம் என்றே சிந்திக்கின்றதாகத் தெரிகின்றது.

இந்த நெருக்குவாரந்தான் தீரன் நெளசாத்தின் எழுத்து மேற்கிளம்பலை பலி எடுக்கின்றது. ஏதோ சாட்டுக்கு தீரன் நெளசாத் என்று தொடங்கி முடித்து விடுவார்கள்.

"நான் வாசித்ததில் எனக்குப் பிடித்த பத்து நாவல்களில் ஆர்.எம். நெளசாத்தின் நட்டுமை நாவலும் ஒன்று " எனச் சொல்லும் தைரியம் ஷோபா சக்திக்கு இருக்குமானால் நமது பேராசிரியர்களுக்கு அது இல்லாமல் போனது ஏன் ?

எஸ்.பொன்னுத்துரை இறுதியில் வெற்றி பெற்றதைப்போல் தீரன் நெளசாத்தின் எழுத்து வல்லமையும் அதன் இலக்கை அடையும்.
பரீட்சனுக்கு என் பாராட்டுக்கள்.
 


கவிஞர் எ.எம்.எம் அலி

 



கவிஞர் எ.எம்.எம் அலி

ஞானத் திரட்சியில்
நமது கலைஞன் தீரன் --கலை
ஏனத் திலிட்டு
இலக்கியப் பசி தீர்த்தபின்
மோனத் தவஞ்செய்து
முக்தி பெறும்
மோகத்தில் ஆழ்ந்தனனோ ?
இல்லையேல் இவன் வேறு
சோ(வே )கத்தில் வீழ்ந்தனனோ 

0

 

எ எம் எம் அலி

முகநூல் எனக்களித்த நல்ல நண்பர்.
அகந் திறந்து பேசி
அன்பைப் பரிமாறி உள்ளோம் !
தீரன் நௌஷாத்
எழுத்துக் களத்தில் பேனாவேந்திய பெரும்
வீரன் !

தமிழுலகு நன்கறிந்த
தரமான எழுத்தாளன் , கவிஞன் !
விகடமாய்ப் பின்னூட்டம்
விடுப்பவன் !
நௌஷாத் தெனதன்பு
நட்புக்கு என்று முரியவனே


ஆர்எம்? நௌஷாத்? என்று வினவினால் ;

அவர்தாம் எழுத்தாளர் தீரன்.R.M. நௌஷாத்

எண்திக்கையும் தனதெழுத்தால்

ஈர்த்தெடுத்துவெற்றி கொண்ட

எனது எழுத்துலகத் தோழன் !


ஏ.எம். சாஜித்

 

ஏ.எம். சாஜித்

 

ஈழத்து படைப்பாளிகளையும் பேசுவோம் (1)

 

 

 

இதனை ஈழத்து பூதந் தேவனாரில் இருந்து ஆரம்பிக்க வேணடியிருந்தாலும் சமகாலத்தில் இயங்குபவர்களை தொட்டு எமது பார்வையினை செலுத்தலாம் என நினைக்கிறேன்...

 

முதலாவதாக தீரன். ஆர்.எம் நௌஷாத் ஈழத்தில் மிக முக்கியமான படைப்பாளி கிழக்கின் மண்வாசனையினை தனது நாவல்களினூடே வெளிப்படுத்தி தனக்கான எழுத்துக்களை வடிவமைத்துக் கொண்டவர். நட்டுமை, கொல்வதெழுதுதல், நாவலும் வெள்ளி விரல் எனும் சிறுகதை தொகுப்பு என படைப்புக்களை தந்த தீரன் தற்பொழுது இலக்கிய உரையாடல்கள் மூலமாக ஈழத்து பரப்பில் இயங்கி வருகிறார்...

 

முகநூலே இன்றைய இலக்கிய செற்பாட்டுத் தளத்தின் வீரனாக வலம் வருகின்ற நிலையில் தீரனின் எழுத்துலகம் பற்றி ஈழத்துப் படைப்பாளிகள் கதையாட வேண்டிய கால கட்டம் நெருங்கியுள்ளது. தமிழ் இலக்கிய பரப்பின் நாவல்களின் வருகையில் தீரனின் படைப்புக்கள் நிறைய விவாதங்களை பேசக்கூடியவை கிராமிய வாழ்வு முறை தொட்டு அரசியல் தளம் வரைக்கும் கதையாடிய மிக நீண்ட பரப்பினை தனது நாவல்களில் பேசியவர் தீரன்...

 

இதில் கொல்தெழுதுதல் அரசியல் சூழலில் நின்று இயங்கிய ஒரு ஹீரோயிசப் பிரதி என்றே கூறலாம். இவ்வகையான புதுமைப் படைப்புக்கள் ஈழத்து சூழலில் பெரும் கதையாடலினை தோற்றுவிக்கக் கூடியவை. அவை பற்றி நிறையப் பேச வேண்டும். நாம் இருக்கிறோம், செத்து மடியவில்லை எமது எழுத்துக்களும் காத்திரம் மிக்கவைதான் என முழு இலககிய சூழலுக்கும் எத்தி வைக்க எமது படைப்பாளிகள் முன் வருதல் அவசியமாகிறது...

 

 ஈழத்து சூழலில் அதிகம் கதையாடப்பட வேண்டிய கதையாடாமல் மறுதலிக்கப்பட்ட தீரனின் கொல்வதெழுதுததல் நாவல் மிக முக்கியமானது...

போரினை மட்டும் மையமாகக் கொண்ட நாவல்களை பேசு பொருளாகக் கொள்பவர்கள் முஸ்லிம் சமூக மைய விளையாட்டினை பேசிய அதிரடி ரியலிச நாலான கொல்வதெழுதுதலை மறந்து விட்டனர் எனும் ஆதங்கம் இன்றும் என் மனதில் உள்ளது...





குறிப்பு: இது தேடலுக்கான கோடு மட்டுமே. ஆகையால் தீரனின் படைப்புக்களைத் தேடி வாசிப்போம். பேசுவோம்...

(நாளை இன்னுமொரு ஈழப் படைப்பாளியுடன்....)

சாஜித்..

 

எஸ். நளீம்

 

எஸ். நளீம்

 

தீரன் என்கிற ஆர்எம் நௌஷாத்.
கவிதை, சிறுகதை, நாவல் எதுவானாலும் இவர் எழுதினால் ஒரு அலாதிதான்.

 

எஸ்.எல்.எம். ஹனிபா

 

ஸ்.எல்.எம். ஹனிபா



தீரன் நெளசாத் நமது சிறுகதையை உயிர்ப்பான திசைக்கு மாற்றிய வல்லவர் அவரை வாழ்த்துவதில் பெருமைப்படுகிறேன் காலச்சுவடு மூலம் தமிழக வாசகர் மத்தியில் பரவலாக அறியப்பட்ட ஒரே படைப்பாளி அவரே!

 

எழுகவி ஜெலில்

 

எழுகவி ஜெலில்

பன்முகப் பார்வை மிகுந்த ஜனரஞ்சக எழுத்தாளர். மாயங்களில்லாத மனசுக்காரர் நட்புக்கு உகந்தவர் நமது தீரன் அவர்கள். வாழ்த்துக்கள்